தேவையான பொருட்கள்:-
- 1 கப் மைதா மாவு
- 6 தேக்கரண்டி தூள் சர்க்கரை
- 5 தேக்கரண்டி உருகி வெண்ணெய்
- 4 தேக்கரண்டி சாக்லேட் சிப்ஸ்
- 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
- 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
- 1 தேக்கரண்டி பால்
- 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் மேலே குறிப்பிட்ட அளவு பட்டர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையில் மைதா சேர்த்து அதனுடன் பேக்கிங் பவுடர்,வெண்ணிலா எசன்ஸ், சாக்கோ சிப்ஸ் மற்றும் பால் சேர்க்கவும்.
எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து மாவு போல் செய்து கொள்ளவும்.
மாவு மிருதுவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
மாவை சப்பாத்தி மாவு போல் உருட்டி பின்பு அதனை தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குக்கியின் வடிவத்தை செய்து குக்கி கட்டர் மூலம் வெட்டி எடுக்கவும்.
10 நிமிடம் ஓவனை சூடாக்கிக் கொள்ளவும்.
பிறகு மைக்ரோவேவ் ட்ரேயில் குக்கியை வைத்து ஓவனில் வைக்கவும்.
குக்கி சமைக்கப்பட்டவுடன் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.
Now Ready To Eat a Tasty - Vennila Choco - Chip Cookies.......!


Comments
Post a Comment