KFC சிக்கன் செய்வது எப்படி .

KFC சிக்கன் செய்வது எப்படி ....

தேவையான பொருட்கள்

தயிர் - 1/2 கப்.

பால் - 1 கப்.

முட்டை - 1.

இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்.

பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.

மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்.

மிளகு தூள் – 2 டீஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

எலுமிச்சை – ½ பழம்.

கோழி துண்டுகள் – 8

மைதா - 1 கப்.

சோள மாவு - 1/2 கப்.

தனியா தூள் – ½ டீஸ்பூன்.

சீரக தூள் - 1/2 டீஸ்பூன்.

பூண்டு தூள் – 1 டீஸ்பூன்.

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 

🔥முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், பால் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றவும்.

🔥பின்பு அதனுடன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

🔥 அந்த கலவையில் கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஊற விடவும்.

🔥பின்னர், தட்டில் மைதா, சோள மாவு, தனியா தூள், சீரக தூள், பூண்டு தூள், மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

🔥இதையடுத்து, ஊற வைத்துள்ள கோழி துண்டுகளை இந்த மாவு சேர்மத்தில் நன்கு கலந்து கொள்ளவும்.

🔥இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தயாராக வைத்துள்ள கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கேஎஃப்சி பிரைடு சிக்கன் தயார்....

Comments